Monday, 28 November 2011

முள்றியின் டைரி -2 அ.....து....தமிழன்னா அந்தப் பயம் இருக்கணும்.

இது நடந்தது 1998 – ம் வருடம் – நைரோபியில். என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் போய் காண்பித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். ஏகப்பட்ட ட்ராஃபிக். ஏதோ ஒரு விஜய் படத்தில் விஜய்யும் விவேக்கும் Road Diversion என்று அங்கே போய் இங்கே போய் கடைசியில் திருப்பதியில் போய் நிற்பார்களே, அதுபோல நாங்களும் அங்கே போய் இங்கே போய் கடைசியில் Kikomba Market – க்குள் புகுந்தோம். நைரோபி தெரிந்த மக்களுக்கு Kikomba Market என்றால் தெரியும். Famous for Notorious activities & Muggings. என் டிரைவர் சைமன் அப்போதே மெதுவாகச் சொன்னான் ( என்னை விட வயதில் சிறியவன். அதனால்தான் அவன் இவன் என்கிறேன். தப்பா நினைச்சுக்காதீங்க) முரளி சார் வேண்டாம் இது மோசமான Area என்று. டே….…போடா…எல்லாம் தெரியும் என்றேன் ( நம்ம என்னைக்கு மத்தவங்க பேச்சைக் கேட்டிருக்கோம்..). எல்லோருக்கும் Mr ஏழரை வெறும் ஏழரை ஆண்டுகள் மட்டும்தான் இருந்து விட்டுப் போவார். ஆனால் எனக்கு மட்டும் Life Long- ஆக கூடவே அன்பாக வந்து  கொண்டிருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இப்பொழுதுதான் புரிகிறது.
சரி….விஷயத்திற்கு வருகிறேன்….Kikomba-விலும் போய் நல்ல Traffic இல் மாட்டிக் கொண்டோம். ஆச்சரியமாக நைரோபியில் அன்று நல்ல வெயில் வேற. நம்ம பங்காளி Mr 7 ½ புண்ணியத்தில் A/C –யும் வேலை செய்யவில்லை. So, எல்லா ஜன்னலையும் நன்றாகத் திறந்து வேறு வைத்திருந்தோம் ( வா…வா..என்று கூப்பிடுகிற மாதிரியே இருந்தது என்று நினைக்கிறேன்). அப்போது என் பக்க ஜன்னலை யாரோ பட படவென்று தட்டினார்கள். நாங்கள் எல்லோரும் அந்தப் பக்கம் பார்க்கையில், மறு பக்கத்தில் ஒருவன் வந்து என் மனைவியின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். ஒரு நொடிக்குள் எல்லாம் நடந்து விட்டது. நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், அவனைத் துரத்துவதற்காக இறங்கினேன். சைமன் அப்போதும் சொன்னான். Mr முரளி, போனால் போகட்டும் இறங்காதீர்கள் என்று. டேய் பாவி, 10 பவுண்டா என்று சொல்லி விட்டு அவன் பின்னாலேயே ஓடினேன். உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஒரு அசுரத்தனமான Chasing. என் கூடவே மற்றும் ஒரு 10 பேர் துரத்தினார்கள் ( அதில் முக்கால் வாசி பேர் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது)…அது ஒரு Professional (???) Chasing. கிட்டத்தட்ட அவனை இரண்டு முறை  மிக அருகில் நெருங்கி விட்டேன்…Just –ல மிஸ். அப்போதுதான் அந்த மதில்சுவரைக் கவனித்தேன். நல்ல உயரம். முன்னால் ஓடிக் கொண்டிருந்த நண்பன் ரொம்ப கெச்சலாக நம்ம ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்தான். போல்வால்ட் இல்லாமலேயே சர்வ சாதாரணமாகத் தாண்டுவான் போலிருந்தது. நமக்கோ SINGLE PACK ( அதாங்க தொப்பை)….ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் அவகாசமில்லை. அப்போதுதான் அவன் திரும்பி என்னைக் கண்ணோடு கண் பார்த்தான். Very Powerful சந்திப்பு. ஒரு நொடிக்கும் குறைவான அந்த நேரத்தில் அவன் கண்ணுக்குள் தெரிந்த அந்த மரண பயத்தைப் பார்த்தேன். ஏனோ என்னைக் கண்டு அவன் நடுங்கியதை உணர்ந்தேன். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்தச் செயினை என்னைப் பார்த்து வீசி விட்டு அந்த சுவரைத் தாண்டிக் குதித்து சிட்டாகப் பறந்து விட்டான். எனக்கோ மனதிற்குள் பெருமிதமான பெருமிதம். அ……து….தமிழன்னா அந்தப் பயம் வேணும்டா என்று நினைத்துக் கொண்டே அந்தச் செயினை எடுத்துக் கொண்டு திரும்பினேன். அப்போதுதான் கூட ஓடி வந்தவர்களைக் கவனித்தேன். எனக்கு மிகவும் அருகில் ஓடி வந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் மாயமாக மறைந்திருந்தனர். அந்த ஒருவரும், அந்த ஏரியா இன்ஸ்பெக்டராம் - மஃப்டியில். கையில் பிஸ்டலை தூக்கிப் பிடித்துக் கொண்டே வந்திருக்கிறார். நம்ம திருடர் Friend அதைப் பார்த்துத்தான் வெல வெலத்துப் போயிருக்கிறார். சகோதரி உத்ரா கிருஷ்ணன் பாஷையில் சொல்வதானால், செம பல்பு போங்க….
அது சரி, வாழ்க்கையில் பல்பு வாங்கலாம். ஆனால், பல்பே வாழ்க்கையானால் அதுக்குப் பெயர் என்னங்க?

வெ. பாலமுரளி…..

1 comment:

  1. அருமை. Paragraphs ஆகப் பிரித்துப் போட்டால், படிக்க இன்னும் வசதியாக இருக்கும்.

    ReplyDelete